சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் மார்ச் மாதத்தில் கூகுள் வை-பை சேவையை பெறவுள்ளது  • தமிழகத்தில் கூகுள் வை-பை சேவையை பெறும் முதல் நிலையமாக வரலாற்று சிறப்புமிக்க சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் அமையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • மார்ச் 2016க்குள் இந்த நிலையத்தில் வை-பை வசதியை முழுதுவதுமாக வழங்க திட்டமிட்டு செயல்படுத்தி வருவதாகவும் இந்திய ரெயில்டெல் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர். இது, இந்தியாவில் 100 ரயில் நிலையங்களில் வை-பை வசதியை அறிமுகம் செய்வதற்கான ரெயில்டெல் நிறுவனத்துடனான கூகுளின் திட்டமாகும்.
  • மத்திய ரயில் நிலையத்தில் சோதனை முயற்சியான இத்திட்டம் 2014 செப்டம்பர் முதல் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 2016 மார்ச் மாதம் முதல், பயனிகளுக்கு விநாடிக்கு 1GB வேகத்தில் இணைப்புகளை வழங்கப்படும். ரெயில்டெல் நிறுவனம் பிராட்பேன்ட் சேவையையும், கூகுள் நெட்வொர் அக்ஸஸ் பாய்ன்டுகளையும் வழங்கும்.
  • தமிழகத்தில், சென்னை எழும்பூர், தாம்பரம், அரக்கோணம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட மேலும் ஆறு ரயில் நிலையங்களில் வழங்க கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை தேர்ந்தெடுத்துள்ளார்.
  • கூகுளின் இந்தப் புது முயற்சி பிரச்சித்திபெற்ற மும்பை மத்திய ரயில் நிலையத்தில் ஜனவரி மாதத்தில் செயல்படுத்தப்படும்.

மூலம்: New Indian Express

தமிழில்: ஜ.சிவகுரு (In tamil- By Sivaguru)

Siva Guru, a graduate of SASTRA University, is a Software Engineer by profession. Besides blogging, he is interested in reading Historical Fictions and visiting heritage sites. He writes articles in Tamil in his free time. He is from Thanjavur which is the cultural capital of Tamil nadu and is famous for ancient Tamil literature.

About Sindhu S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *