இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத்திட்டமான ஸ்மார்ட் சிட்டீஸ் திட்டத்தில் முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நகரங்களின் பட்டியலில் இடம் பெற்ற கொச்சி, புவனேஸ்வர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களின் வளர்ச்சித் திட்டத்தில் ஜெர்மனி பங்களிக்கும் என்று அந்நாட்டின் சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு, கட்டிடம் மற்றும் அணு பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் குன்தர் அல்தர் கூறியுள்ளார்.
முன்னதாக, ‘ஸ்மார்ட்’ நகரங்களாக வளர்ச்சி அடையக்கூடிய நகரங்களைக் கண்டறிய ஜெர்மனி இந்தியாவுடன் இணைந்து ஆறு உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. அந்த ஆறு உறுப்பினர்களில், இருவர் இந்தியாவின் ஊரக வளர்ச்சித்துறையையும், ஒருவர் வீட்டு வசதி மற்று நகர்புற வறுமை ஒழிப்புத் துறையைம் சேர்ந்தவராவர். மற்ற மூவரும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் மார்டின் நே, ஜெர்மனி ஸ்மார்ட் சிட்டீஸ் திட்டத்திற்கு எப்போதும் ஆதரவளித்து வருவதாக கூறியுள்ளார்.
நகர்ப்புற வாழ்வை எளிமையாக்கும் பல தொழில்நுட்பங்கள் பலவற்றை ஜெர்மனி உருவாக்கியுள்ளது. ஜெர்மனிய நிறுவனங்களும் ஸ்மார்ட் நகரகளுக்கான திட்டங்களையும் அமைத்து வருகின்றன. நிலையான நகர்புற போக்குவரத்து, நீர் மேலாண்மை, கழிவு மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க சக்திகள், ஆற்றல் திறன் மேலாண்மை போன்ற துறைகளில் அந்நாடு ஈடுபட்டு வருவதாகவும் திரு. நே கூறியுள்ளார்.
மூலம்: Firstpost
தமிழில்: ஜ.சிவகுரு