மேற்கு தொடர்ச்சி மலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நில மற்றும நீர் மேலாண்மைதமிழகத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களின் வளர்ச்சிக்காக இத்திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள விவசாயப் பணிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பயணாளிகள்:
இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளும், விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளோரும் பயனடைவர்.
 
பயண்கள் :
நிலப்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படும். சுய வேலைகளுக்காக 10 சதவீதமும், சமுதாய பணிகளுக்கான செலவுகளில் 5 சதவீதமும் பங்களிக்கவேண்டும். பழங்குடியினருக்கான சுய வேலைகளுக்கு 5சதவீதம் பங்களிப்பு போதுமானது.
 
தகுதி: 
மேற்குறிப்பிட்ட பகுதிகளின் கீழ் வரும் நிலங்களின் உரிமையுடைய விவசாயிகள்ள இத்திட்டத்தின் பயணடைய தகுதியுடையவராவர்.
இத்திட்டத்தின் பயணடைய விவசாயிகள் கீழ்கண்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்:
  • உதவி செயற்பொறியாளர், வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை
  • செயற்பொறியாளர்,  மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை
  • மேற்பார்வைப் பொறியாளர்
  • முதன்மை பொறியியலாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, நந்தனம், சென்னை 35. தொலைப்பேசி: 2435 2686, 2435 2622
  •  
இத்திட்டம் பற்றிய மேலும் தகவல்களை இங்கே காணவும்
தமிழில்: ஜ.சிவகுரு

About The Indian Iris

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *