2012-13ல் தமிழக அரசு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின வகுப்புகளுக்கான அனைத்து நலத் திட்டங்கள் பற்றிய தகவல்களையும் அத்திட்டங்களை அமல்படுத்தும் அரசு துறைகளைப் பற்றியும் அதிகாரப்பத்திரம் வெளியிட்டது. தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 69% மக்கள் மேற்குறிப்பிட்ட வகுப்புகளைச் சேர்ந்தவராவர். அனைத்துத் திட்டங்களும் சமூக பொருளாதார மற்றும் கல்வி சார்ந்த வளர்ச்சியை சார்ந்தவை.
சமூக, பொருளாதார மற்றும் கல்விநிலையில் பின்தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு முக்கியப்பங்கு வகிப்பதால், அரசு கீழ்க்கண்ட இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அறிவித்துள்ளது.
1 தாழ்த்தப்பட்ட வகுப்பினர் | 18 % ** |
2 பழங்குடியினர் | 1% |
3 பிற்படுத்தப்பட்டோர்(பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் தவிர்த்து) | 26.5 % |
4 பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் | 3.5% |
5 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் | 20% |
மொத்தம் | 69 % |
** (தாழ்த்தப்பட்டோருக்கான இடங்களில், 16% இடங்கள், அருந்ததியர்களுக்கு விருப்ப அடிப்படையில் வழங்கப்படும்)
மாவட்ட மற்றும் தாலுகா நிலை அலுவலர்கள் சாதிச் சான்றிதழ் வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளனர்.
கல்வி:
பொருளாதார வளர்ச்சிக்கு கல்வி இன்றியமையாததாகும். அதனால் கல்வியில் அதிக கவனம் செலுத்தப்பட்டு, பல சலுகைகள், உதவித்தொகை மற்றும் பரிசுகள் மேல்நிலை மற்றும் உயர்நிலை கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில திட்டங்கள் இங்கே விளக்கப்பட்டுள்ளன.
கள்ளர் மீட்புப் பள்ளிகள்:
சீர்மரபினர் கல்வி வளர்ச்சிக்காக மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் இப்பள்ளிகள் துவங்கப்பட்டன. அவற்றுள் ஆங்கிலம் கற்பிக்கும் பள்ளிகளும் அடங்கும். இப்பளிகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரொக்கப்பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
- 1 முதல் பரிசு – ரூ.10,000
- 1 இரண்டாம் பரிசு – ரூ.7,000
- 3 மூன்றாம் பரிசுகள் – தலா ரூ.5,000
கள்ளர் மீட்புப் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளின் பட்டியல்:
சலுகைகள் | தகுதி | சம்பந்தப்பட்ட அதிகாரி |
எழுத்துப் பலகைகள் | 1 முதல் 3ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்கள் | பள்ளி முதல்வர் |
புத்தகங்கள் | 1 முதல் 12ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்கள் | பள்ளி முதல்வர் |
நோட்டு புத்தகங்கள் | 3 முதல் 10ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்கள் | பள்ளி முதல்வர் |
சீருடைகள் (2) | 1 முதல் 8ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்கள் | பள்ளி முதல்வர் |
சிறப்பு வினா விடை புத்தகங்கள் | 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்கள் | பள்ளி முதல்வர் |
மிதிவண்டிகள் | 11ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்கள் | பள்ளி முதல்வர் |
தங்கும் விடுதிகள்:
மேற்குறிப்பிட்ட அனைத்து வகுப்பினருக்காகவும் ஆண் மற்றும் பெண் இலவச தங்கும் விடுதிகள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் அருகே நடத்தப்படுகின்றன.
- பள்ளி விடுதி சேர்க்கை தகுதி:
- மாணவர் 4 முதல் 12ஆம் வகுப்பில் படிக்க வேண்டும்
- பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/- த்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
- மாணவரின் வீடு பள்ளியிலிருந்து 8கிலோ மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும்(பெண்களுக்கு இந்த விதி பொருந்தாது).
- கல்லூரிவிடுதி சேர்க்கை தகுதி:
- மாணவர் டிப்லமோ, இளங்கலை அல்லது முதுகலை பட்டம் படிப்பவராக இருக்க வேண்டும்.
- பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/- த்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
- மாணவரின் வீடு பள்ளியிலிருந்து 8கிலோ மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும்(பெண்களுக்கு இந்த விதி பொருந்தாது).
விடுதியில் சேர மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரியையோ அல்லது விடுதி வார்டனையோ தொடர்புகொள்ளலாம்.
விடுதிகளில் கீழ்க்கண்ட வசதிகள் வழங்கப்படுகின்றன:
- உணவு:
- பள்ளி விடுதி – ஒரு மாணவருக்கு மாதம் ரூ. 650
- கல்லூரி விடுதி – ஒரு மாணவருக்கு மாதம் ரூ. 75
- செய்தித்தாள்:ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையும் இரண்டு தமிழ் நாளிதழ்களும் விடுதிகளுக்கு வழங்கப்படும்.
- மருத்துவ பரிசோதனை:ஆண்டுக்கு 3 முறை
விடுதிகளில் 3% இடங்கள் உடல் ஊனமுற்ற மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 5 இருக்கைகள் முகாம்களில் உள்ள தமிழ் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்க்கப்பட்ட மாணவர்கள் விடுதிகளில் எப்போது வேண்டுமானாலும் அனுமதிக்கப்பட்டு பயிற்சி முடியும் வரை அங்கே தங்கியிருக்கலாம்.
வசதி | தகுதி | சம்பந்தப்பட்ட அதிகாரி |
சீருடைகள் | 4 முதல் 10ஆம் வகுப்பு படிக்கும் விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் | விடுதி வார்டன் |
சிறப்பு கையேடுகள் | 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்கள் | |
உல்லன் சுவெட்டர் | நீலகிரி, சேலம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட விடுதிகளில் படிக்கும் அணைத்து மாணவர்கள் | |
போர்வைகள் | பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளிலிருக்கும் அனைத்து மாணவர்கள் |
ப்ரீ மெட்ரிக் உதவித்தொகை திட்டம்:
அரசு மற்றும் அரசு உதவித்தொகை பெறும் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்புக் கட்டணமும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணமும் அரசு ரத்து செய்துள்ளது. இவை தவிர, மேலும் பல உதவித்திட்டங்களும், பரிசுகளும், விருதுகளும் மாணவர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
எண் | திட்டத்தின் பெயர் | வகுப்பு | தகவல்கள் |
1 | ப்ரீ மெட்ரிக் உதவித்தொகை | ஆங்கில வழிக் கல்வி பயிலும் 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்கள் | கல்விக் கட்டணம்
· 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு – மாதம் 20ரூ.வீதம் 10 மாதங்களுக்கு ரூ. 200. · 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு – மாதம் 25ரூ.வீதம் 10 மாதங்களுக்கு ரூ. 250. தேர்வுக் கட்டணம்: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழுவதுமாக வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோருக்கான விதிமுறைகள் · பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000த்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். · குடும்பத்தில் பட்டதாரி எவரும் இருக்க கூடாது. மற்ற வகுப்பினருக்கு எந்த விதிமுறையும் கிடையாது. |
2 | போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை | ஆங்கில வழிக் கல்வி பயிலும் 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள்
|
கல்விக் கட்டணம் மாதம் ரூ.50 வீதம் 10 மாதங்களுக்கு ரூ. 500.
தேர்வுக் கட்டணம்: 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழுவதுமாக வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோருக்கான விதிமுறைகள் · பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000த்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். · குடும்பத்தில் பட்டதாரி எவரும் இருக்க கூடாது. மற்ற வகுப்பினருக்கு எந்த விதிமுறையும் கிடையாது. |
அரசு மற்றும் அரசு உதவி பெறும் முதுகலை, டிப்லமோ, தொழிற்பயிற்ச்சி மற்றும் ஆராய்ச்சி வகுப்புகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் | சிறப்பு கட்டணம், கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் மற்றும் புத்தகத்துக்கான பணம் உதவித்தொகை கையேட்டில் குறிக்கப்பட்டிருப்பது போல முழுமையாக வழங்கப்படும்.
விதிமுறைகள்: பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000த்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். |
||
3 | மூன்று ஆண்டு இலங்கலை வகுப்புகளுக்கு இலவச கல்வி உதவித்தொகை (பி.ஏ., எ.எஸ்.சி., பி.காம்) | அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 வருட பட்டயப் படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவர்கள் | சிறப்புக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் அரசு நிர்நயித்துள்ள படி முழுமையாக வழங்கப்படும்.
எந்த விதிமுறையும் கிடையாது. |
4 | 3 ஆண்டு தொழிற்கல்விக்கான இலவச கல்வி உதவித்தொகை | அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்கல்வி கல்லூரிகளில் 3 வருட பட்டயப் படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவர்கள் | கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் அரசு நிர்நயித்துள்ள படி முழுமையாக வழங்கப்படும்.
பிற்படுத்தப்பட்டோருக்கான விதிமுறைகள் · பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000த்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். · குடும்பத்தில் டிப்லமோ அல்லது பட்டதாரி எவரும் இருக்க கூடாது. மற்ற வகுப்பினருக்கு எந்த விதிமுறையும் கிடையாது. |
5 | தொழில்நுட்ப படிப்புக்கான இலவச கல்வி உதவித்தொகை (மருத்துவம், விவசாயம், சட்டம் மற்றும் பொறியியல்) | அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுய நிதிக் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவர்கள் | கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் அரசு நிர்நயித்துள்ள படி முழுமையாக வழங்கப்படும்.
விதிமுறைகள் · பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000த்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். · குடும்பத்தில் பட்டதாரி எவரும் இருக்க கூடாது. |
மாணவர்களுக்கான பரிசுத்திட்டங்கள்
தகுதி:
- மாணவர்கள்பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின வகுப்பைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
- வருமாணம் ஒரு தடையல்ல.
- அரசு, அரசு உதவி பெறும் அல்லது தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள்.
- தமிழ் மாணவரின் முதல் மொழிப்பாடமாக இருக்க வேண்டும்.
- கல்வித்துறையின் பரிசை பெற்ற மாணவர்கள் இத்துறையின் பரிசைப் பெற முடியாது.
- ஒரே மதிப்பெண் பெறும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் பரிசு வழங்கப்படும்.
மாநில அளவிலான பரிசுகள் – 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு
பரிசு விவரம் | பரிசுத் தொகை | |
10ஆம் வகுப்பு | 12 ஆம் வகுப்பு | |
முதல் பரிசு: பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது சீர்மரபின ஆணுக்கும் பெண்ணுக்கும் என மொத்தம் 4 முதல் பரிசுகள் வழங்கப்படும் | ரூ.25,000/- | ரூ.50,000/- |
இரண்டாம் பரிசு: பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது சீர்மரபின ஆணுக்கும் பெண்ணுக்கும் என மொத்தம் 4 இரண்டாம் பரிசுகள் வழங்கப்படும் | Rs.20,000/- | Rs.30,000/- |
மூன்றாம் பரிசு: பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது சீர்மரபின ஆணுக்கும் பெண்ணுக்கும் என மொத்தம் 4 மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும் | Rs.15,000/- | Rs.20,000/- |
மாவட்ட அளவிலான பரிசுகள் – 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு
பரிசு விவரம் | பிரிசுத் தொகை | |
10ஆம் வகுப்பு | 12ஆம் வகுப்பு | |
முதல் பரிசு: பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது சீர்மரபின ஆணுக்கும் பெண்ணுக்கும் என மொத்தம் 4 முதல் பரிசுகள் வழங்கப்படும் | ரூ.3000/- | ரூ.6000/- |
இரண்டாம் பரிசு: பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது சீர்மரபின ஆணுக்கும் பெண்ணுக்கும் என மொத்தம் 4 இரண்டாம் பரிசுகள் வழங்கப்படும் | ரூ.2000/- | ரூ.4000/- |
மூன்றாம் பரிசு: பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது சீர்மரபின ஆணுக்கும் பெண்ணுக்கும் என மொத்தம் 4 மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும் | ரூ.1000/- | ரூ.2000/- |
பேரறிஞர் அண்ணா நினைவு விருது
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு இந்த பேரறிஞர் அண்ணா நினைவு விருது வழங்கப்படுகிறது. தொழில்நுட்பப் பயிற்சி படிப்பதற்காக மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5000 வீதம் 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
தகுதி:
- பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
- வருமான வரம்பு இல்லை
குறிப்பு: ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே மதிப்பெண் பெற்றால் அனைவருக்கும் பரிசு வழங்கப்படும்.
தந்தை பெரியார் நினைவு விருது
தொழிற்கல்வி வகுப்புகளில் சேரும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தந்தை பெரியார் நினைவு விருது வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.5000 வீதம் 3 ஆண்டுகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.
தகுதி:
- பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
- வருமான வரம்பு இல்லை
குறிப்பு: ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே மதிப்பெண் பெற்றால் அனைவருக்கும் பரிசு வழங்கப்படும்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழகத்தின் சிறந்த பள்ளிகளில் படிப்பதற்கான திட்டம்
அரசு பள்ளிகளில் 10ஆம் வகுப்பு படித்து பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை மாவட்ட அளவில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருப்பமான திமிழகத்தின் சிறந்த தனியார் பள்ளியில் படிப்பதற்காக நிதியுதவி வழங்கப்படும்.
- கல்விக் கட்டணம் – ரூ.8,000
- பராமரிப்புக் கட்டணம் – ரூ.3650
- விடுதிக் கட்டணம் – ரூ. 15,000
- சிறப்பு வகுப்புக் கட்டணம் – ரூ.1,500
- மொத்தம் – ரூ.28,150
தகுதி:
- பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
- பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000த்திற்கும் குறைவாக இருக்குவேண்டும்.
குறிப்பு: இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு அதிக பட்சமாக ரூ.28,000 ஒரு மாணவனுக்கு 11 மற்றும் 12ஆம் வகுப்புக்கு வழங்கப்படும்.
தங்குவதற்கான மானியம்
போர்டிங் மானியம் அரசு அங்கீகரித்த தினியார் விடுதிகளில் தங்கியிருக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு மாதம் ரூ.650 வீதம் 10 மாதங்களுக்கு தங்குவதற்கான மானியம் வழங்கப்படுகிறது.
தகுதி:
- பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.50,000த்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
கிராமப்புற பெண்களுக்கான திட்டம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின 3 முதல் 5 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.500 மற்றும் 6ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆண்டுதோரும் ரூ.1000 வழங்கப்படுகிறது.
தகுதி:
- பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.25,000த்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
- விதவை அல்லது கணவனால் கைவிடப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
குறிப்பு: இந்தத் திட்டம் சென்னையைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம்
அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் +1 வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வருமான வித்தியாசம் இல்லாமல் வழங்கப்படுகிறது. விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு இத்திட்டத்தில் மதிவண்டி வழங்கப்படமாட்டாது.
இந்திய பொதுப்பணித்துறை தேர்வுக்கான பயிற்ச்சிகள்
- உறுப்பினர் பட்டதாரியாக இருக்க வேண்டும்.
- விடுதியில் தங்கி படிக்க விரும்பும் உறுப்பினர்களின் பெற்றோர் வருமானம் ரூ.1,00,000த்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். விடுதியில் மாதம் ரூ.1,200 சாப்பாட்டு செலவுக்காக பெறப்படும். மற்ற மாணவருக்கு வருமான வரம்பு கிடையாது.
- உறுப்பினர்கள் சிறப்பு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். அண்ணா மேலாண்மை நிறுவனம் இந்த பயிற்சியை மேற்கொள்ளும்.
தொடர்புக்கு
All India Civil Services Examinations Coaching Centre
12th Main Road, 2nd Avenue,
Tamil Nadu Housing Board,
Transit Quarters, Anna Nagar,
Chennai – 600 040.
தொலைப்பேசி எண்: 044-26211475, 044-26211909
மூலம்:- https://www.tn.gov.in/scheme/data_view/27550
தமிழில்: ஜ.சிவகுரு