தமிழக அரசு ரூ.10கோடிக்கும் குறைவான திட்ட செலவீட்டில் பயன்படுத்தப்பட்ட காற்றாலைகளை வாங்குவதற்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தகுதி:
- காற்றாலைக்கு தேவையான அனைத்து கட்டுமான வசதிகளும் ஆலையில் அமைத்து, கிரிட் உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- வெளியேற்றவதில் பிரச்சினை இருத்தல் கூடாது.
- இயந்திரங்களில் வயது 10 வருடங்களுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
- இடம், காற்றாலையை வாங்குபவரின் பெயரில் இருத்தல் வேண்டும்.
- தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக வாடிக்கையாளர்கள் 30% மற்றவர் 40% தொகையை பங்களிப்பாக வழங்க வேண்டும்.
பயன்கள்:
- வர்த்தக மற்றும் வேலைவாய்புகள்.
- திட்டச் செலவில் 75% அரசு வழங்கும்.
- வாங்குவோர் தொகையை திருப்பி செலுத்த போதுமான அவகாசம் அளிக்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் பயனடைய கீழ்க்கண்ட முகவரியை அணுகலாம்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்,
692, அண்ணா சாலை,
நந்தனம்,
நந்தனம்,
சென்னை – 600035
தமிழ்நாடு, இந்தியா.