தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC), தற்பொழுது இயங்கி கொண்டிருக்கும் அல்லது புதிதாக தொடங்க உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 50 இலட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்க புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.
தகுதி:
சிறு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் தவிர, சரக்கு உற்பத்தி, செயலாக்கம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள், மருத்துவம் மற்றும் உணவகம் போன்ற சேவை துறையில் உள்ள நிறுவனங்கள், இடம் ஏதுவாக உள்ள மற்ற அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்.
எந்த அமைவிடப்பாகுபாடுமின்றி, தொழில் விரிவாக்கம், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கம் மேற்கொள்ள விரும்பும், தற்பொழுது இயங்கிக் கொண்டிருக்கும் சிறு தொழில் பிரிவுகள் மற்றும் சேவை துறை நிறுவனங்கள்.
மொத்த திட்டச் செலவு 50 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
உரிமையாளரின் பங்கு மொத்த செலவில் 20 சதவிகிதமாக இருக்க வேண்டும் (நிலையானது).
கடன் தொகை:
புதிய பிரிவுகளுக்கு: காலக்கடன் மொத்த திட்டத்தில் 80% (அதிகபட்சம் 40 இலட்சம் ரூபாய்)
தற்பொழுது இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவுகளுக்கு: காலக்கடன் மொத்த திட்டத்தில் 75% (அதிகபட்சம் 37.50 இலட்சம் ரூ)
மேலும் வட்டி விவரங்களுக்கு இங்கு அணுகவும்..
கடன் திருப்பி செலுத்தும் காலம் :
கடன் திருப்பி செலுத்தும் காலம் அதிக பட்சம் 6 ஆண்டுகள் (கடனைக் காலம் தாழ்த்திக் கொடுப்பதற்கான சட்ட உரிமைக் காலமான 6 – 24 மாதங்களும் இதில் அடங்கும்) ஆகுமு.
குறிப்பு : தமிழ் நாடு அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவங்களின் கடன் மீது 3% வட்டி மானியம் அளித்து உதவி வருகிறது. இது 03.09.2012 முதல் அமலில் வந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இங்கு அணுகவும்..
pls guide me this project
Hi We are Sree N\Vinayaga Enterprises, we are overtaking the idle unit in Thiruvarur Dist, need Govt Scheme and bank loan
what i neet document to have this tiic loan ? also how i create quatation plz guide for that .
i want more details about this project
how to apply for this loan