Breaking News
Home / Initiatives / Center / Smart Cities / ஜுன் 25க்குள் ஸ்மார்ட் சிட்டீஸ் திட்டங்களை அறிமுகப்படுத்துமாறு தேர்தெடுக்கப்பட்ட மாநகரங்களிடம் அரசு அறிவுறுத்தியுள்ளது
Photo Courtesy- www.mapsofindia.com

ஜுன் 25க்குள் ஸ்மார்ட் சிட்டீஸ் திட்டங்களை அறிமுகப்படுத்துமாறு தேர்தெடுக்கப்பட்ட மாநகரங்களிடம் அரசு அறிவுறுத்தியுள்ளது

மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.வெங்கய்யா நாயுடு, ‘ஸ்மார்ட் இந்தியா திட்டம்: ஆடுத்த கட்ட நடவடிக்கைகள்’ என்ற கருத்தறங்கில் பங்கேற்று பேசுகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாநகரங்களை, ஜுன் மாதம் 25ஆம் தேதிக்குள், அந்தந்த மாநகரங்களுக்கான திட்டங்களை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

“இந்தத் திட்டத்திற்காக முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாநகரங்களும் எந்தவொரு பாகுபாடின்றியும் நடுநிலையோடும் தேர்ந்தெடுக்கப்பட்டவையாகும். மக்களின் பங்களிப்பு, பொதுப் பிரச்சனைகளுக்கான தெளிவான தீர்வுகள், மாநகரின் குறிக்கோள் மற்றும் திட்டம் ஆகியவையே தேர்வுக்கான அடிப்பைடயாக அமைந்துள்ளன. பிரபலமடையாத கர்நாடகாவிலுள்ள தேவனாகிரியும், மகாராஷ்டிராவின் சோளாபூரும் மிகவும் பிரசித்திபெற்ற டில்லி மாநகராட்சியைவிட அதிக மதிப்பு பெற்றுள்ளன. அதேபோல, ஆந்திரத்தின் காகிநாடா சென்னை மாநகராட்சியைவிட பட்டியலில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது.” என்றார் அமைச்சர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான விரைவுப் போட்டியில் கலந்துகொண்டுள்ள வாரங்கல், சண்டிகர், லக்னோ, பாகல்பூர், டெகராடூன் போன்ற 23 மாநகரங்களையும், முதல் 20 மாநகரங்களின் அனுபவங்களிலிருந்து தங்கள் திட்டங்களை மேம்படுத்துமாறும் அமைச்சர் கூறியுள்ளார்.

மூலம்: PIB
தமிழில்: ஜ.சிவகுரு

SivaGuru, a graduate of SASTRA University, is a Software Engineer by profession. Besides blogging, he is interested in reading Historical Fictions and visiting heritage sites. He writes articles in Tamil in his free time. He is from Thanjavur which is the cultural capital of Tamil nadu and is famous for ancient Tamil literature.

Check Also

Haryana Govt aims to create new jobs through ESDM and IT Policy

The Haryana Government launched  two new policies for the state under ‘Digital Haryana Summit’. “Digital ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *